Thursday, October 7, 2010

காதலோடு விளையாடி...

 

 

 

















பல்லாங்குழி விளையாடும்
பருவத்திலேயே
கற்றிருப்பாயோ
உனக்குள் என்னை
ஒளித்துவைத்து
விளையாடும்
இந்த
உயிர்விளையாட்டை
...............................................


நீ
எவ்வளவு
அழகானவள் என்று
நீயே பார்த்துக்கொள்ள
படைக்கப்பட்டவைதாம்
என் கண்கள்
..........................


குழந்தைப்பருவத்துக்குப் பிறகு
தூங்குவதற்கு
இரண்டு தலையணைகள்
தேவைப்படுவது
இந்தக்
காதல் வந்தபிறகுதான்
................................................



பல்லாங்குழி விளையாடும்
பருவத்திலேயே
கற்றிருப்பாயோ
உனக்குள் என்னை
ஒளித்துவைத்து
விளையாடும்
இந்த
உயிர்விளையாட்டை
...............................................


ஒரு பெருவனத்துக்கு நடுவே

படுத்துறங்கும்
உன் கூந்தல் வகிடென
நீண்டு கிடக்கிறது
இந்தப் பயணப்பாதை

பயண வேகத்துக்கு
ஈடுகொடுத்து
துணைக்கு வரும்
நிலவாய்
உடன் வருகிறது
உன் நினைவு

அப்போது
என் முகம் உரசிக்
கடந்துபோன குளிர் காற்று
உன் சாயலிலிருந்தது
................................................



புராதனக் கோட்டையின்
சிற்பங்கள்
உன் உருவத்தையே
ஒத்திருக்கின்றன

குகைக் கோயில்களின்
சுவரோவியங்கள்
உன் முகத்தையே
நினைவுபடுத்துகின்றன

எதிர்ப்படும் பெண்களிடம்
உன் அழகில் சிறிதாவது
இல்லாமலில்லை

தெரியவில்லை
இன்னும் எத்தனை
நூற்றாண்டுகளுக்கு
இவ்வுலகைப்
புரட்டிப்போடப்போகிறதோ
உன் பேரழகு
...........................


உன்னிடம் பேசவிடாமல்
என் இதழ்களைத் தடுத்த
வார்த்தைகளுக்கும்

என்னை நிமிர்ந்து பார்க்கவிடாமல்
உன் இமைகளைத் தாழச்செய்த
வெட்கங்களுக்கும்
பிறந்ததுதான்
நம் காதல்
......................


கை தவறி
விழுந்து உடைந்த
பொம்மைக்காகத் தேம்பும்
எதிர்வீட்டுக் குழந்தையை
உனக்குச்
சமாதானம் செய்யத் தெரிந்திருப்பது
ஆறுதலளிக்கிறது
எனக்கு

...................................................

நூல் கிடைக்குமிடம்...
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.40/-

7 comments:

  1. நல்லா இருக்கிறது

    ReplyDelete
  2. மிகவும் அருமை தோழரே...

    ReplyDelete
  3. ////////குழந்தைப்பருவத்துக்குப் பிறகு
    தூங்குவதற்கு
    இரண்டு தலையணைகள்
    தேவைப்படுவது
    இந்தக்
    காதல் வந்தபிறகுதான்//////////

    வார்த்தைகளில் காதல் கசிகிறது . அருமையான ரசனை

    ReplyDelete
  4. செமையா இருக்கு மதி சார் ..
    உங்க கவிதைகளை பருகும் போது காணாமல் ஓடி போனது என் இதயம் ..
    சுற்றி பார்த்து கொண்டேன் என்னையறியாமல் சிரித்ததை நானறியாமல் யாரேனும் பார்த்து விட்டனரா என்று..
    காதலில் பைதியமாகலாம் நின் கவிதைக்கு பைத்தியமான பெண்ணாகி விட்டேனே ..
    அன்பு சகோதரி கார்த்தி

    ReplyDelete
  5. குழந்தைப்பருவத்துக்குப் பிறகு
    தூங்குவதற்கு
    இரண்டு தலையணைகள்
    தேவைப்படுவது
    இந்தக்
    காதல் வந்தபிறகுதான்

    nice anna...
    i like ur lines, after thabu shankar's lines
    best of luck anna :)

    ReplyDelete
  6. i came to know about your blog by eegarai anna
    there also some peoples who love your lines are there.

    i not aware of that ur book also published now only i came to know
    i ll plan to buy ur book anna.

    which book shall i buy :)

    ReplyDelete