Sunday, December 12, 2010

கவனிக்கத் தவறிய அப்பா
















கவனிக்கத் தவறிய அப்பா
---------------------------------------------------------
தாத்தா சொத்தென்று எதுவும் இல்லை
அப்பாவின் எழுபது வருட உழைப்புதான்
உருவாகி இருக்கிறது
வீடுகளாகவும் விளை நிலங்களாகவும்.

ஆறு பிள்ளைகளுக்கும்
ஆனது திருமணம்
ஏதும் பிரச்னையே இல்லை.

ஒரு சுபயோக சுபதினத்தில்
பைசா பாக்கி இல்லாமல்
பிரித்துக்கொண்டாயிற்று
சொத்துக்களையும்.

கடைசியாகத்தான் பேசிக்கொண்டோம்
அப்பா, அம்மா எங்கே இருப்பாங்க
யார் எவ்வளவு தரணும் என்று.

அப்பாவின் கண்கள்
கலங்கியதா என்றெல்லாம்
நான்
பார்க்கவில்லை!

- ஆர்.சி.மதிராஜ்
-----------------------------------------------------
நன்றி : ஆனந்த விகடன் (15 -12 -2010)

1 comment:

  1. ரொம்ப யதார்த்தமான கவிதை .. எல்லா வீட்டிலும் இருக்கும் வாசப்படி விஷயத்தை ஏணிப்படி போட்டு வார்த்தையில ஒரு உயரத்துக்கு எடுத்துட்டு வந்திருக்கீங்க.. வாழ்த்துகள்.. நேரம் இருந்தால் என் கவிதைகளை வாசித்துப் பாருங்க - www.sunshinesignatures.blogspot.com

    ReplyDelete