Sunday, December 19, 2010

விகடன் கவிதை































பாசத் தீ
---------------------------------------
ஊருக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்
சொல்லுவார் அப்பா
'உடம்பைப் பார்த்துக்கப்பா.’
என்று

எனக்கும் ஆசைதான்
சேர்ந்தாற்போல்
நான்கு நாட்கள் விடுமுறையில்
அருகிலேயே இருந்து
அப்பாவைக் கவனித்துக்கொள்ள
என்றாலும்
ஒருபோதும் முடிந்ததில்லை

ஒவ்வோர் இரவிலும்
கட்டிப்பிடித்தபடி
தூக்கத்தில்
மேலே போடும்
மகனின் கால் பிடித்து
அமுக்கிவிடுவேன் இதமாக
அப்பாவை எண்ணிக்கொண்டு!
---------------------------------------------
- ஆர்.சி.மதிராஜ்
--------------------------------------------------
நன்றி : ஆனந்த விகடன் 22.12.2010

11 comments:

  1. அண்ணே அருமையான வரிகள்.நீங்களும் என் மாதிரி ‘அப்பா பிள்ளை’ போல. வாழ்த்துக்கள் பாஸ்.வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. பாலோயராக முடில...ஏதோ டெக்னிக்கல் ப்ராப்ளம்.கவனிக்கவும் நண்பா.

    ReplyDelete
  3. நன்றி... தோழர்... கவனிக்கறேன்...

    ReplyDelete
  4. இறந்து போன தந்தையையும்
    இழந்து போன தருணங்களையும்
    நினைவுபடுத்திய வரிகள்.

    ReplyDelete
  5. அழகிய கவிதை அப்பாவின் அன்பைப்போல!

    ReplyDelete
  6. தந்தைமேல் வைத்துள்ள அன்பின் வெளிப்பாட்டை மிக
    அழகாகக் கவிதை வரிகளளில் சொல்லியுள்ளீர்கள் .அருமை வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .........

    ReplyDelete
  7. மகன் தந்தைகு ஆற்றிய உதவி மகிழ்ச்சியளிக்கிறது .

    ReplyDelete
  8. அப்பனை பிடித்தவனுக்கு ,
    இழந்தவனுக்கு வலியூட்டும் வரிகள்

    ReplyDelete
  9. அப்பாவை எண்ணிக்கொண்டு..
    அருமையான கவிதை நண்பரே..
    அப்பாவினைப்பற்றிய அபூர்வமான பதிவு.

    ReplyDelete